Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:9 — சிலந்திப் பூச்சி

எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றனரோ, அவர்களை நிச்சயமாக நன்னெறியாளர்களுடன் நாம் அனுமதிப்போம்.

[29:8] தன்னுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு மனிதர்களுக்கு நாம் கட்டளை யிட்டோம். ஆனால் என்னுடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்ளுமாறு அவர்கள் உம்மை நிர்ப்பந்திக்க முயன்றால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். உங்களுடைய இறுதித் திரும்புதல் என்னிடமே உள்ளது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்கு நான் அறிவிப்பேன்.

[29:10] “நாங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண் டோம்,” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர், ஆனால் கடவுள்-க்காக ஏதேனும் கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தால், உடனே அவர்கள் மனிதர்களின் துன்புறுத்து தலை கடவுள்-ன் தண்டனையோடு ஒப்பிடுகின்றனர். ஆனால் உமது இரட்சகரின் அருட்கொடைகள் உமது வழியில் வந்தால் “நாங்கள் உங்களோடுதான் இருந்தோம்” என அவர்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆழ்மனதின் எண்ணங்களை கடவுள் முற்றிலும் அறிந்திருக்கவில்லையா?