குர்ஆன் 29:17 — சிலந்திப் பூச்சி
“ கடவுள்-க்குப் பதிலாக நீங்கள் வழிபடுபவை சக்தியற்ற சிலைகளே; நீங்கள் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துக் கொண்டீர்கள்”. கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்கள் உங்களுக்காக எந்த வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால், வாழ்வாதாரங்களை நீங்கள் கடவுள்-இடம் மட்டுமே தேடவேண்டும். நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும், மேலும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்; அவரிடமே உங்களுடைய இறுதித் திரும்புதல் உள்ளது.
[29:16] ஆப்ரஹாம் தன் சமூகத்தாரிடம் கூறினார், “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், மேலும் அவரிடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மேலானதாகும்.
[29:18] நீங்கள் நம்பமறுப்பீர்களாயின், உங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரும் நம்பமறுத் திருக்கின்றனர். தூதரின் ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பதே.