Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:18 — சிலந்திப் பூச்சி

நீங்கள் நம்பமறுப்பீர்களாயின், உங்களுக்கு முன்னிருந்த தலைமுறையினரும் நம்பமறுத் திருக்கின்றனர். தூதரின் ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பதே.

[29:17] “ கடவுள்-க்குப் பதிலாக நீங்கள் வழிபடுபவை சக்தியற்ற சிலைகளே; நீங்கள் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துக் கொண்டீர்கள்”. கடவுள்-உடன் நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்கள் உங்களுக்காக எந்த வாழ்வாதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால், வாழ்வாதாரங்களை நீங்கள் கடவுள்-இடம் மட்டுமே தேடவேண்டும். நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும், மேலும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்; அவரிடமே உங்களுடைய இறுதித் திரும்புதல் உள்ளது.

[29:19] எவ்வாறு கடவுள் படைப்பைத் துவக்குகின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.