குர்ஆன் 29:21 — சிலந்திப் பூச்சி
தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டனைக்கு என தீர்மானிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவர் மீதும் தன் அருளைப் பொழிகின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பிச் சென்றடைவீர்கள்.
[29:20] “பூமியில் சுற்றித் திரிந்து உயிர்களின் துவக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்”* என்று கூறுவீராக. ஏனெனில் கடவுள் இவ்விதமாகவே மறுவுலகில் படைப்பைத் துவக்குவார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[29:22] பூமியின் மீதோ அல்லது வானத்திலோ, உங்களில் எவரும் இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-உடன் ஓர் இரட்சக ராகவும் மற்றும் எஜமானராகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.