Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:25 — சிலந்திப் பூச்சி

அவர், “ இவ்வுலகில் உங்களுக்கிடையில் சில நட்புக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேண்டி, சமூக அழுத்தம் காரணமாகவே கடவுள்-உடன் சக்தியற்ற இணைத் தெய்வங்களை நீங்கள் வழிபடுகின்றீர்கள். ஆனால் பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்அன்று, நீங்கள் ஒருவர் மற்றவரைக் கைவிட்டு விடுவீர்கள், மேலும் ஒருவர் மற்றவரைச் சபிப்பீர்கள். நரகமே உங்களு டைய விதியாகும், அங்கே நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய இயலாது” என்று கூறினார்.

[29:24] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறு மொழியாக, “ அவரைக் கொல்லுங்கள், அல்லது அவரை எரித்து விடுங்கள்,” என்று அவர்கள் கூறுவதாகவே இருந்தது. ஆனால் கடவுள் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றினார். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு படிப்பினையை வழங்க வேண்டும்.

[29:26] லோத் அவருடன் நம்பிக்கை கொண்டார், மேலும், “நான் என் இரட்சகரிடம் குடி பெயர்ந்து செல்கின்றேன். அவர்தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.