குர்ஆன் 29:39 — சிலந்திப் பூச்சி
மேலும் காரூன், ஃபேரோ, மற்றும் ஹாமான்; மோஸஸ் அவர்களிடம் தெளிவான அத்தாட்சி களுடன் சென்றார். ஆனால் அவர்கள் பூமியின் மீது தொடர்ந்து கொடுங்கோன்மை புரிந்தனர். அதன் விளைவாக, அவர்களால் (தண்டனையை) தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
[29:38] அதைப்போலவே, ‘ஆது மற்றும் தமூது (ஆகி யோரும் அழிக்கப்பட்டனர்). அவர்களுடைய அழிவுச்சின்னங்களின் மூலமாக இது உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர்களுடைய கண்களில் அழகானதாக ஆக்கிவிட்டான், மேலும் கண்களுடையவர் களாக அவர்கள் இருந்த போதிலும், பாதையை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டான்.
[29:40] அந்த நம்பமறுப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய பாவங்களின் விளைவாக அழிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை நாம் உக்கிரமான காற்றின் மூலம் அழித்தோம், சிலர் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டனர், சிலரை நாம் பூமி விழுங்கும்படி செய்தோம், மேலும் சிலரை நாம் மூழ்கடித்தோம். அவர்களுக்கு அநீதியிழைத்தது கடவுள் அல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.