குர்ஆன் 29:40 — சிலந்திப் பூச்சி
அந்த நம்பமறுப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய பாவங்களின் விளைவாக அழிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை நாம் உக்கிரமான காற்றின் மூலம் அழித்தோம், சிலர் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டனர், சிலரை நாம் பூமி விழுங்கும்படி செய்தோம், மேலும் சிலரை நாம் மூழ்கடித்தோம். அவர்களுக்கு அநீதியிழைத்தது கடவுள் அல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[29:39] மேலும் காரூன், ஃபேரோ, மற்றும் ஹாமான்; மோஸஸ் அவர்களிடம் தெளிவான அத்தாட்சி களுடன் சென்றார். ஆனால் அவர்கள் பூமியின் மீது தொடர்ந்து கொடுங்கோன்மை புரிந்தனர். அதன் விளைவாக, அவர்களால் (தண்டனையை) தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
[29:41] கடவுள்-உடன் வேறு எஜமானர்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு உவமானமாவது, பெண் சிலந்தியும் அதனுடைய வீடுமாகும்; அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்*, வீடுகள் அனைத்திலும் மிகவும் பலஹீனமானது சிலந்தியின் வீடே ஆகும்.