Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:41 — சிலந்திப் பூச்சி

கடவுள்-உடன் வேறு எஜமானர்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு உவமானமாவது, பெண் சிலந்தியும் அதனுடைய வீடுமாகும்; அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்*, வீடுகள் அனைத்திலும் மிகவும் பலஹீனமானது சிலந்தியின் வீடே ஆகும்.

[29:40] அந்த நம்பமறுப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய பாவங்களின் விளைவாக அழிக்கப்பட்டனர். அவர்களில் சிலரை நாம் உக்கிரமான காற்றின் மூலம் அழித்தோம், சிலர் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டனர், சிலரை நாம் பூமி விழுங்கும்படி செய்தோம், மேலும் சிலரை நாம் மூழ்கடித்தோம். அவர்களுக்கு அநீதியிழைத்தது கடவுள் அல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

[29:42] அவரைத் தவிர அவர்கள் வழிபடுகின்ற எதுவாயினும் அவை உண்மையில் ஒன்றுமே யில்லை என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறி கின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.