Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:47 — சிலந்திப் பூச்சி

நாம் இந்த வேதத்தை உமக்கு வெளிப்படுத்தி யிருக்கின்றோம், மேலும் முந்திய வேதங் களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள் பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள். அத்துடன், உம்முடைய சமூகத்தாரில் சிலரும் இதில் நம்பிக்கை கொள்வார்கள். உண்மையில், நமது வெளிப் பாடுகளைப் புறக்கணிப்பவர்கள் தான் மெய்யான நம்பமறுப்பவர்கள்.

[29:46] அவர்கள் வரம்பு மீறினாலே தவிர-இயன்ற அளவிற்கு மிகச்சிறந்த முறையிலன்றி வேதம் வழங்கப்பட்ட (யூத, கிறிஸ்தவ, & முஸ்லிம்) மக்களிடம் நீங்கள் தர்க்கம் செய்யக்கூடாது- மேலும், “எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வற்றின் மீதும் மேலும் உங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் எங்களுடைய தெய்வமும் மேலும் உங்களு டைய தெய்வமும் அதே ஒருவர்தான்; அவருக் கே நாங்கள் அடிபணிந்தோராக இருக்கின் றோம்” என்று கூறுவீராக.

[29:48] முந்திய வேதங்களை நீர் படித்திருக்கவில்லை, அன்றி உமது கரத்தால் அவற்றை எழுதி யிருக்கவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஏற்க மறுத்தவர்கள் சந்தேகங்களைத் தாங்கிக் கொண்டிருக்கக் காரணம் இருந் திருக்கக்கூடும்.