குர்ஆன் 29:46 — சிலந்திப் பூச்சி
அவர்கள் வரம்பு மீறினாலே தவிர-இயன்ற அளவிற்கு மிகச்சிறந்த முறையிலன்றி வேதம் வழங்கப்பட்ட (யூத, கிறிஸ்தவ, & முஸ்லிம்) மக்களிடம் நீங்கள் தர்க்கம் செய்யக்கூடாது- மேலும், “எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வற்றின் மீதும் மேலும் உங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் எங்களுடைய தெய்வமும் மேலும் உங்களு டைய தெய்வமும் அதே ஒருவர்தான்; அவருக் கே நாங்கள் அடிபணிந்தோராக இருக்கின் றோம்” என்று கூறுவீராக.
[29:45] வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக் கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.
[29:47] நாம் இந்த வேதத்தை உமக்கு வெளிப்படுத்தி யிருக்கின்றோம், மேலும் முந்திய வேதங் களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள் பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள். அத்துடன், உம்முடைய சமூகத்தாரில் சிலரும் இதில் நம்பிக்கை கொள்வார்கள். உண்மையில், நமது வெளிப் பாடுகளைப் புறக்கணிப்பவர்கள் தான் மெய்யான நம்பமறுப்பவர்கள்.