குர்ஆன் 29:45 — சிலந்திப் பூச்சி
வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக் கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.
[29:44] சத்தியத்தோடு, கடவுள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தார். நம்பிக்கை யாளர்களுக்குப் போதுமான சான்றை இது வழங்குகின்றது.
[29:46] அவர்கள் வரம்பு மீறினாலே தவிர-இயன்ற அளவிற்கு மிகச்சிறந்த முறையிலன்றி வேதம் வழங்கப்பட்ட (யூத, கிறிஸ்தவ, & முஸ்லிம்) மக்களிடம் நீங்கள் தர்க்கம் செய்யக்கூடாது- மேலும், “எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட வற்றின் மீதும் மேலும் உங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் எங்களுடைய தெய்வமும் மேலும் உங்களு டைய தெய்வமும் அதே ஒருவர்தான்; அவருக் கே நாங்கள் அடிபணிந்தோராக இருக்கின் றோம்” என்று கூறுவீராக.