குர்ஆன் 29:44 — சிலந்திப் பூச்சி
சத்தியத்தோடு, கடவுள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தார். நம்பிக்கை யாளர்களுக்குப் போதுமான சான்றை இது வழங்குகின்றது.
[29:43] இந்த உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம், மேலும் அறிவுடை யோரைத்தவிர* எவர் ஒருவரும் அவற்றின் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
[29:45] வேதத்தில் உமக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை நீங்கள் ஓதி வரவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் வேண்டும், ஏனெனில் தொடர்புத் தொழுகைகள் தீமைகளையும் மற்றும் ஒழுக்கக் கேட்டையும் தடுக்கின்றன. ஆனால் (ஸலாத் மூலம்) கடவுள்-ஐ நினைவு கூர்வதே மிகவும் முக்கியமான குறிக் கோளாகும்.* நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் அறிகின்றார்.