Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:48 — சிலந்திப் பூச்சி

முந்திய வேதங்களை நீர் படித்திருக்கவில்லை, அன்றி உமது கரத்தால் அவற்றை எழுதி யிருக்கவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஏற்க மறுத்தவர்கள் சந்தேகங்களைத் தாங்கிக் கொண்டிருக்கக் காரணம் இருந் திருக்கக்கூடும்.

[29:47] நாம் இந்த வேதத்தை உமக்கு வெளிப்படுத்தி யிருக்கின்றோம், மேலும் முந்திய வேதங் களைக் கொண்டு எவர்களுக்கு நாம் அருள் பாலித்தோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள். அத்துடன், உம்முடைய சமூகத்தாரில் சிலரும் இதில் நம்பிக்கை கொள்வார்கள். உண்மையில், நமது வெளிப் பாடுகளைப் புறக்கணிப்பவர்கள் தான் மெய்யான நம்பமறுப்பவர்கள்.

[29:49] உண்மையில், அறிவைப் பெற்றிருப்பவர்களின் நெஞ்சங்களில் இந்த வெளிப்பாடுகள் தெளிவானதாக இருக்கின்றன. தீயவர்கள் மட்டுமே நமது வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வார்கள்.