குர்ஆன் 29:49 — சிலந்திப் பூச்சி
உண்மையில், அறிவைப் பெற்றிருப்பவர்களின் நெஞ்சங்களில் இந்த வெளிப்பாடுகள் தெளிவானதாக இருக்கின்றன. தீயவர்கள் மட்டுமே நமது வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வார்கள்.
[29:48] முந்திய வேதங்களை நீர் படித்திருக்கவில்லை, அன்றி உமது கரத்தால் அவற்றை எழுதி யிருக்கவுமில்லை. அவ்வாறு இருந்திருந்தால், ஏற்க மறுத்தவர்கள் சந்தேகங்களைத் தாங்கிக் கொண்டிருக்கக் காரணம் இருந் திருக்கக்கூடும்.
[29:50] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அற்புதங்கள்* மட்டும் அவருக்கு இறங்கி வந்திருந்தால்!” என்று கூறினார்கள். “அற்புதங்கள் அனைத்தும் கடவுள்-இட மிருந்து மட்டுமே வருகின்றன; நான் தெளிவான தோர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை” என்று கூறுவீராக.