Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:50 — சிலந்திப் பூச்சி

அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அற்புதங்கள்* மட்டும் அவருக்கு இறங்கி வந்திருந்தால்!” என்று கூறினார்கள். “அற்புதங்கள் அனைத்தும் கடவுள்-இட மிருந்து மட்டுமே வருகின்றன; நான் தெளிவான தோர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை” என்று கூறுவீராக.

[29:49] உண்மையில், அறிவைப் பெற்றிருப்பவர்களின் நெஞ்சங்களில் இந்த வெளிப்பாடுகள் தெளிவானதாக இருக்கின்றன. தீயவர்கள் மட்டுமே நமது வெளிப்பாடுகளை அலட்சியம் செய்வார்கள்.

[29:51] அவர்களுக்கு ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற, இந்தப் புத்தகத்தை நாம் இறக்கி அனுப்பியிருப்பது போதுமானதோர் அற்புதமாக* இல்லையா? உண்மையில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு கருணையாகவும் மேலும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கின்றது.