குர்ஆன் 29:51 — சிலந்திப் பூச்சி
அவர்களுக்கு ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற, இந்தப் புத்தகத்தை நாம் இறக்கி அனுப்பியிருப்பது போதுமானதோர் அற்புதமாக* இல்லையா? உண்மையில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு கருணையாகவும் மேலும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கின்றது.
[29:50] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அற்புதங்கள்* மட்டும் அவருக்கு இறங்கி வந்திருந்தால்!” என்று கூறினார்கள். “அற்புதங்கள் அனைத்தும் கடவுள்-இட மிருந்து மட்டுமே வருகின்றன; நான் தெளிவான தோர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை” என்று கூறுவீராக.
[29:52] “எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். நிச்சயமாக, பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்,” என்று கூறுவீராக.