குர்ஆன் 29:52 — சிலந்திப் பூச்சி
“எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். நிச்சயமாக, பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்,” என்று கூறுவீராக.
[29:51] அவர்களுக்கு ஓதிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற, இந்தப் புத்தகத்தை நாம் இறக்கி அனுப்பியிருப்பது போதுமானதோர் அற்புதமாக* இல்லையா? உண்மையில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது ஒரு கருணையாகவும் மேலும் ஒரு நினைவூட்டலாகவும் இருக்கின்றது.
[29:53] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு சந்திப்பு என்பது இல்லாதிருந்தால், தண்டனை அவர்களிடம் உடனடியாக வந்திருக்கும்.* நிச்சயமாக, அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அவர்களிடம் அது திடீரென வரும்.