Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:53 — சிலந்திப் பூச்சி

தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு சந்திப்பு என்பது இல்லாதிருந்தால், தண்டனை அவர்களிடம் உடனடியாக வந்திருக்கும்.* நிச்சயமாக, அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அவர்களிடம் அது திடீரென வரும்.

[29:52] “எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாகக் கடவுள் போதுமானவர். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். நிச்சயமாக, பொய்மையின் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்,” என்று கூறுவீராக.

[29:54] தண்டனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் அவர்கள் சவால் விடுகின்றனர்! நரகம் நம்ப மறுப்பவர்களை ஏற்கனவே சூழ்ந்துள்ளது.