Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:58 — சிலந்திப் பூச்சி

எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களை நிச்சயமாக நாம் மாளிகைகளும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளும் கொண்ட சுவனத்தில் அமர்த்துவோம். என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள். செயல் புரிவோருக்கு எத்தகையதொரு அழகிய வெகுமதி.

[29:57] ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் இறுதியாக நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[29:59] உறுதியாய் விடாமுயற்சியுடனும், மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பேற்படுத்திக் கொண்டும் இருந்தவர்கள் அவர்கள்தான்.