குர்ஆன் 29:59 — சிலந்திப் பூச்சி
உறுதியாய் விடாமுயற்சியுடனும், மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பேற்படுத்திக் கொண்டும் இருந்தவர்கள் அவர்கள்தான்.
[29:58] எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறி யானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களை நிச்சயமாக நாம் மாளிகைகளும், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளும் கொண்ட சுவனத்தில் அமர்த்துவோம். என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப்பார்கள். செயல் புரிவோருக்கு எத்தகையதொரு அழகிய வெகுமதி.
[29:60] பல உயிரினம் அதன் வாழ்வாதாரத்தைச் சுமந்து கொண்டிருக்க வில்லை, அதற்கும், அதேபோல் உங்களுக்கும் கடவுள் வழங்குகின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.