குர்ஆன் 29:62 — சிலந்திப் பூச்சி
கடவுள் தான் தன் படைப்புக்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பவரும் மேலும் நிறுத்தி வைப்பவரும் ஆவார். அனைத்துப் பொருட்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[29:61] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவரும், மேலும் சூரியன் மற்றும் சந்திரனை உங்களுக்குப் பணி செய்யும் படி ஆக்கியவரும் யார்,” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்?
[29:63] “இறந்த நிலங்களை, மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புபவர் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “கடவுள்-ஐப் புகழுங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும் பாலானோர் புரிந்து கொள்வதில்லை.