குர்ஆன் 29:61 — சிலந்திப் பூச்சி
“வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவரும், மேலும் சூரியன் மற்றும் சந்திரனை உங்களுக்குப் பணி செய்யும் படி ஆக்கியவரும் யார்,” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள்?
[29:60] பல உயிரினம் அதன் வாழ்வாதாரத்தைச் சுமந்து கொண்டிருக்க வில்லை, அதற்கும், அதேபோல் உங்களுக்கும் கடவுள் வழங்குகின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[29:62] கடவுள் தான் தன் படைப்புக்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பவரும் மேலும் நிறுத்தி வைப்பவரும் ஆவார். அனைத்துப் பொருட்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.