Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:63 — சிலந்திப் பூச்சி

“இறந்த நிலங்களை, மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புபவர் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “கடவுள்-ஐப் புகழுங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும் பாலானோர் புரிந்து கொள்வதில்லை.

[29:62] கடவுள் தான் தன் படைப்புக்களில் இருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பவரும் மேலும் நிறுத்தி வைப்பவரும் ஆவார். அனைத்துப் பொருட்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[29:64] இவ்வுலக வாழ்வு வீண்பகட்டு மற்றும் விளையாட்டு என்பதை விட அதிகம் எதுவுமில்லை, அதே சமயம் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் வீடுதான் மெய்யான வாழ்வாகும்.