குர்ஆன் 29:64 — சிலந்திப் பூச்சி
இவ்வுலக வாழ்வு வீண்பகட்டு மற்றும் விளையாட்டு என்பதை விட அதிகம் எதுவுமில்லை, அதே சமயம் அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் வீடுதான் மெய்யான வாழ்வாகும்.
[29:63] “இறந்த நிலங்களை, மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புபவர் யார்” என்று அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “கடவுள்-ஐப் புகழுங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும் பாலானோர் புரிந்து கொள்வதில்லை.
[29:65] அவர்கள் ஒரு கப்பலில் சவாரி செய்யும்போது, தங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள்-க்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவர்களை அவர் காப்பாற்றி கரை சேர்த்தவுடன், அவர்கள் இணைத்தெய்வ வழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்.