குர்ஆன் 3:100 — இம்ரானின் குடும்பத்தினர்
நம்பிக்கை கொண்டோரே, வேதத்தையுடைய மக்களில் சிலருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அவர்கள் உங்களை நம்பிக்கை கொண்ட பிறகு நம்ப மறுப்பவர்களாக பழைய நிலைக்கு திருப்பி விடுவார்கள்.
[3:99] “வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் சாட்சிகளாக இருந்தும், நம்பிக்கை கொள்ள விரும்புகின்றவர்களை கடவுள்-ன் பாதையி லிருந்து ஏன் விரட்டுகின்றீர்கள், இன்னும் அதனை சீர்குலைக்க நாடுகின்றீர்கள்?” என்று கூறுவீராக. நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் கடவுள் ஒரு போதும் அறியாதவரில்லை.
[3:101] கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டும், மேலும் அவருடைய தூதர் உங்களுக்கிடையில் இருந்து கொண்டும் இருக்கும் போது எவ்வாறு நீங்கள் நம்ப மறுக்க இயலும்? கடவுள் - ஐ எவர் உறுதியாகப் பற்றிக் கொள்கின்றாரோ அவர் சரியான பாதையில் வழி நடத்தப்படுவார்.