Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:101 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகள் உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டும், மேலும் அவருடைய தூதர் உங்களுக்கிடையில் இருந்து கொண்டும் இருக்கும் போது எவ்வாறு நீங்கள் நம்ப மறுக்க இயலும்? கடவுள் - ஐ எவர் உறுதியாகப் பற்றிக் கொள்கின்றாரோ அவர் சரியான பாதையில் வழி நடத்தப்படுவார்.

[3:100] நம்பிக்கை கொண்டோரே, வேதத்தையுடைய மக்களில் சிலருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அவர்கள் உங்களை நம்பிக்கை கொண்ட பிறகு நம்ப மறுப்பவர்களாக பழைய நிலைக்கு திருப்பி விடுவார்கள்.

[3:102] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-ஐ எவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டுமோ, அவ்வாறு அவரை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அடிபணிந்தவர்களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.