குர்ஆன் 3:104 — இம்ரானின் குடும்பத்தினர்
நல்லதின் பால் அழைத்து, நன்னெறியை ஆதரித்து மேலும் தீமையைத் தடுக்கும் ஒரு சமூகம் உங்களில் இருக்கட்டும். இவர்களே வெற்றியாளர்கள்.
[3:103] நீங்கள் கடவுள்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலு
[3:105] தங்களுக்குத் தெளிவான சான்றுகள் வழங்கப் பட்ட பின்னரும், பிளவுபட்டு மேலும் தர்க்கித் துக் கொண்டவர்கள் போன்று நீங்கள் இருக்கா தீர்கள். ஏனெனில் இவர்கள் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.