குர்ஆன் 3:106 — இம்ரானின் குடும்பத்தினர்
சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பிரகாசமாகவும், அதே சமயம் மற்ற முகங்கள் (துக்கத்தால்) இருண்டுபோயும் இருக்கும் அந்நாள் வரும். முகங்கள் இருண்டு போனவர்களைப் பொறுத்த வரை, அவர்களிடம் கேட்கப்படும் - “நம்பிக்கை கொண்ட பின்னர் நீங்கள் நம்ப மறுத்து வீட்டீர்கள் இல்லையா? ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.”
[3:105] தங்களுக்குத் தெளிவான சான்றுகள் வழங்கப் பட்ட பின்னரும், பிளவுபட்டு மேலும் தர்க்கித் துக் கொண்டவர்கள் போன்று நீங்கள் இருக்கா தீர்கள். ஏனெனில் இவர்கள் பயங்கரமான தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
[3:107] பிரகாசமான முகங்கள் உடையவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கடவுள்-ன் கருணை யில் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.