குர்ஆன் 3:140 — இம்ரானின் குடும்பத்தினர்
நீங்கள் கஷ்டத்தை அனுபவித்தால், பகைவரும் அதே போன்ற கஷ்டத்தை அனுபவிக்கவே செய்கின்றார்கள். வெற்றி மற்றும் தோல்வியின் நாட்களை நாம் தான் மக்கள் மத்தியில் மாறி மாறி வரச் செய்கின்றோம். கடவுள் இவ்விதமாக உண்மையான நம்பிக்கையாளர் களைச் சிறப்பித்து அடையாளங்காட்டுகின்றார், மேலும் உங்களில் சிலருக்கு வீரமரணம் கொண்டு அருள்பாலிக்கின்றார். அநீதமா னோரைக் கடவுள் வெறுக்கின்றார்.
[3:139] நீங்கள் தடுமாறவோ, அன்றி கவலை கொள்ளவோ வேண்டாம், ஏனெனில் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்களே இறுதி வெற்றியாளர்கள்.
[3:141] கடவுள் இவ்விதமாக நம்பிக்கையாளர்களை வலுப்படுத்தி, மேலும் நம்ப மறுப்பவர்களை இழிவிற்குள்ளாக்குகின்றார்.