குர்ஆன் 3:191 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் கடவுள்-ஐ* நின்ற நிலையிலும், உட் கார்ந்த நிலையிலும் மேலும் அவர்களின் சாய்ந்த நிலையிலும் நினைவில் கொள்கின்றனர். மேலும் அவர்கள் வானங்கள் மற்றும் பூமி ஆகிய வற்றின் படைப்பைக் குறித்து சிந்தனை செய்கின்றனர். “எங்கள் இரட்சகரே இவையனைத்தையும் வீணிற்காக நீர் படைக்கவில்லை. நீர் துதிப்பிற்குரியவர், நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவீராக.
[3:190] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுத்திறன் உடையவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.
[3:192] “எங்கள் இரட்சகரே, நீர் எவரையெல்லாம் நரகத்தில் புகுத்துகின்றீரோ அவர்கள் உம்மால் கைவிடப்பட்டவர்கள். இத்தகைய வரம்பு மீறியவர்களுக்கு உதவியாளர்கள் கிடையாது.