Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:192 — இம்ரானின் குடும்பத்தினர்

“எங்கள் இரட்சகரே, நீர் எவரையெல்லாம் நரகத்தில் புகுத்துகின்றீரோ அவர்கள் உம்மால் கைவிடப்பட்டவர்கள். இத்தகைய வரம்பு மீறியவர்களுக்கு உதவியாளர்கள் கிடையாது.

[3:191] அவர்கள் கடவுள்-ஐ* நின்ற நிலையிலும், உட் கார்ந்த நிலையிலும் மேலும் அவர்களின் சாய்ந்த நிலையிலும் நினைவில் கொள்கின்றனர். மேலும் அவர்கள் வானங்கள் மற்றும் பூமி ஆகிய வற்றின் படைப்பைக் குறித்து சிந்தனை செய்கின்றனர். “எங்கள் இரட்சகரே இவையனைத்தையும் வீணிற்காக நீர் படைக்கவில்லை. நீர் துதிப்பிற்குரியவர், நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவீராக.

[3:193] “எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின் பால் அழைத்து: ‘நீங்கள் உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’ எனப் பிரகடனம் செய்ததை நாங்கள் செவியேற்றோம், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இரட்சகரே, எங்களை எங்கள் வரம்பு மீறல்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வீராக, மேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.