குர்ஆன் 3:193 — இம்ரானின் குடும்பத்தினர்
رَبَّنا إِنَّنا سَمِعنا مُنادِيًا يُنادى لِلإيمٰنِ أَن ءامِنوا بِرَبِّكُم فَـٔامَنّا ۚ رَبَّنا فَاغفِر لَنا ذُنوبَنا وَكَفِّر عَنّا سَيِّـٔاتِنا وَتَوَفَّنا مَعَ الأَبرارِ
“எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின் பால் அழைத்து: ‘நீங்கள் உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’ எனப் பிரகடனம் செய்ததை நாங்கள் செவியேற்றோம், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இரட்சகரே, எங்களை எங்கள் வரம்பு மீறல்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வீராக, மேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.
[3:192] “எங்கள் இரட்சகரே, நீர் எவரையெல்லாம் நரகத்தில் புகுத்துகின்றீரோ அவர்கள் உம்மால் கைவிடப்பட்டவர்கள். இத்தகைய வரம்பு மீறியவர்களுக்கு உதவியாளர்கள் கிடையாது.
[3:194] “எங்கள் இரட்சகரே, உம்முடைய தூதர்கள் மூலம் எங்களுக்கு நீர் வாக்களித்த அருட்கொடைகளை எங்கள் மீது பொழிவீராக, மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர், நீர் ஒருபோதும் வாக்குறுதியை முறிப்பவர் அல்ல.”