Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:194 — இம்ரானின் குடும்பத்தினர்

“எங்கள் இரட்சகரே, உம்முடைய தூதர்கள் மூலம் எங்களுக்கு நீர் வாக்களித்த அருட்கொடைகளை எங்கள் மீது பொழிவீராக, மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர், நீர் ஒருபோதும் வாக்குறுதியை முறிப்பவர் அல்ல.”

[3:193] “எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின் பால் அழைத்து: ‘நீங்கள் உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’ எனப் பிரகடனம் செய்ததை நாங்கள் செவியேற்றோம், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இரட்சகரே, எங்களை எங்கள் வரம்பு மீறல்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வீராக, மேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.

[3:195] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு: “உங்களுக்கிடையில் உழைப்பவர் எவருக்கும், நீங்கள் செய்யும் எந்த உழைப்பிற்கும் வெகுமதி வழங்க நான் ஒரு போதும் தவறுவதில்லை, நீங்கள் ஆண் அல்லது பெண் எவராக இருந்தாலும் - நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமே; இவ்விதமாக, எவர்கள் ஊரை விட்டு வெளியேறி, மேலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, மேலும் என் பொருட்டு துன்புறுத்துதலுக்கு உள்ளாகி,