Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:30 — இம்ரானின் குடும்பத்தினர்

يَومَ تَجِدُ كُلُّ نَفسٍ ما عَمِلَت مِن خَيرٍ مُحضَرًا وَما عَمِلَت مِن سوءٍ تَوَدُّ لَو أَنَّ بَينَها وَبَينَهُ أَمَدًا بَعيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفسَهُ ۗ وَاللَّهُ رَءوفٌ بِالعِبادِ

ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த எல்லா நற்காரியங்களும் முன்னால் கொண்டு வரப்பட்டுக் காணும் அந்நாள் வரும். தீய காரியங்களைப் பொறுத்தவரை, அவை வெகுதூரம் விலகிச் சென்றிருக்க வேண்டும் என்று அது விரும்பும். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்களை எச்சரிக்கின்றார். கடவுள் மக்கள் மீது இரக்கமுள்ளவர் ஆவார்.

[3:29] “உங்களின் உள்ளார்ந்த எண்ணத்தை நீங்கள் மறைத்தாலும் சரி, அல்லது அறிவித்தாலும் சரி, கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்திருக் கின்றார்,” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[3:31] “நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களானால், நீங்கள் என்னைப்பின்பற்ற வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அப்போது கடவுள் உங்களை நேசிப்பார், உங்கள் பாவங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.