குர்ஆன் 3:29 — இம்ரானின் குடும்பத்தினர்
“உங்களின் உள்ளார்ந்த எண்ணத்தை நீங்கள் மறைத்தாலும் சரி, அல்லது அறிவித்தாலும் சரி, கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்திருக் கின்றார்,” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[3:28] நம்பிக்கையாளர்கள், ஒரு போதும் நம்பிக்கையாளர்களுக்குப் பதிலாக நம்ப மறுப்பவர்களுடன் நட்புக் கொள்ள மாட்டார்கள். இதைச்செய்கின்ற எவரும் கடவுள்-இடமிருந்து வெளியேற்றப்பட்டவராக இருக்கின்றார். துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக நிர்பந்திக் கப்பட்ட நிலையில் இதைச் செய்பவர்கள் விலக் களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்கள
[3:30] ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த எல்லா நற்காரியங்களும் முன்னால் கொண்டு வரப்பட்டுக் காணும் அந்நாள் வரும். தீய காரியங்களைப் பொறுத்தவரை, அவை வெகுதூரம் விலகிச் சென்றிருக்க வேண்டும் என்று அது விரும்பும். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்களை எச்சரிக்கின்றார். கடவுள் மக்கள் மீது இரக்கமுள்ளவர் ஆவார்.