குர்ஆன் 3:41 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர், “என் இரட்சகரே, எனக்கு ஒரு அடையாளத்தை தாரும்.” என்று கூறினார். அவர் “உமது அடையாளமானது மூன்று நாட்களுக்கு சைகைகளைக் கொண்டே தவிர மக்களிடத்தில் நீர் பேசமாட்டீர். உம் இரட்சகரை அதிகமதிகம் போற்றிக் கொண்டிரும்; இன்னும் இரவும் பகலும் அவரைத் தியானிக்கவும்,” என்று கூறினார்.
[3:40] அவர், “நான் இவ்வளவு வயதானவனாக இருக்கும் போது, மேலும் என் மனைவி மலடாக இருக்கும் போது, நான் எவ்வாறு ஒரு மகனைப் பெற இயலும்?” என்று கூறினார் “அவர், “கடவுள் தான் நாடுகின்றதைச் செய்கின் றார்”என்று கூறினார்.
[3:42] வானவர்கள் கூறினர், “மேரியே கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து இன்னும் உம்மைத் தூய்மைப்படுத்தி விட்டார். பெண்கள் அனைவரிலும் உம்மை அவர் தேர்ந்தெடுத்தார்.