குர்ஆன் 3:42 — இம்ரானின் குடும்பத்தினர்
வானவர்கள் கூறினர், “மேரியே கடவுள் உம்மைத் தேர்ந்தெடுத்து இன்னும் உம்மைத் தூய்மைப்படுத்தி விட்டார். பெண்கள் அனைவரிலும் உம்மை அவர் தேர்ந்தெடுத்தார்.
[3:41] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஒரு அடையாளத்தை தாரும்.” என்று கூறினார். அவர் “உமது அடையாளமானது மூன்று நாட்களுக்கு சைகைகளைக் கொண்டே தவிர மக்களிடத்தில் நீர் பேசமாட்டீர். உம் இரட்சகரை அதிகமதிகம் போற்றிக் கொண்டிரும்; இன்னும் இரவும் பகலும் அவரைத் தியானிக்கவும்,” என்று கூறினார்.
[3:43] “மேரியே, உம்முடைய இரட்சகருக்கு நீர் அடிபணிய வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சிரம்பணிந்தும், குனிந்தும் வழிபட வேண்டும்.”