குர்ஆன் 3:40 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர், “நான் இவ்வளவு வயதானவனாக இருக்கும் போது, மேலும் என் மனைவி மலடாக இருக்கும் போது, நான் எவ்வாறு ஒரு மகனைப் பெற இயலும்?” என்று கூறினார் “அவர், “கடவுள் தான் நாடுகின்றதைச் செய்கின் றார்”என்று கூறினார்.
[3:39] சரணாலயத்தில், அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது வானவர்கள் அவரை அழைத்தனர்: “கடவுள் ஜானைப் பற்றிய நற்செய்தியை உமக்கு தருகின்றார். கடவுள்-ன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர், கண்ணியமானவர், ஒழுக்கமானவர், இன்னும் ஒரு நன்னெறியாளரான வேதம் வழங்கப்பட்டவர்.”
[3:41] அவர், “என் இரட்சகரே, எனக்கு ஒரு அடையாளத்தை தாரும்.” என்று கூறினார். அவர் “உமது அடையாளமானது மூன்று நாட்களுக்கு சைகைகளைக் கொண்டே தவிர மக்களிடத்தில் நீர் பேசமாட்டீர். உம் இரட்சகரை அதிகமதிகம் போற்றிக் கொண்டிரும்; இன்னும் இரவும் பகலும் அவரைத் தியானிக்கவும்,” என்று கூறினார்.