குர்ஆன் 3:39 — இம்ரானின் குடும்பத்தினர்
சரணாலயத்தில், அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்த போது வானவர்கள் அவரை அழைத்தனர்: “கடவுள் ஜானைப் பற்றிய நற்செய்தியை உமக்கு தருகின்றார். கடவுள்-ன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவர், கண்ணியமானவர், ஒழுக்கமானவர், இன்னும் ஒரு நன்னெறியாளரான வேதம் வழங்கப்பட்டவர்.”
[3:38] அப்பொழுதே ஜக்கரியா தன் இரட்சகரிடம் “என் இரட்சகரே, இதுபோன்ற ஒரு நல்ல குழந்தையை எனக்குத் தருவீராக; நீர் பிரார்த்தனைகளைச் செவியேற்பவர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[3:40] அவர், “நான் இவ்வளவு வயதானவனாக இருக்கும் போது, மேலும் என் மனைவி மலடாக இருக்கும் போது, நான் எவ்வாறு ஒரு மகனைப் பெற இயலும்?” என்று கூறினார் “அவர், “கடவுள் தான் நாடுகின்றதைச் செய்கின் றார்”என்று கூறினார்.