குர்ஆன் 30:40 — ரோமானியர்கள்
கடவுள் தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர் தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவைவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். எந்த பங்குதாரர்களையும் கொள்வதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
[30:39] சில மனிதர்களின் செல்வத்தைப் பெருக்கு வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெரு வட்டியானது, கடவுள்-இடம் எந்த ஒரு லாபத்தையும் அடைவதில்லை. ஆனால் நீங்கள் கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடியவர்களாக, தர்மம் வழங்கினால், இவர்கள் தான் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காக்கிப் பெற்றுக் கொள்பவர்கள்.
[30:41] மனிதர்கள் செய்தவற்றின் காரணத்தால், நிலம் மற்றும் கடல் எங்கிலும் பேரழிவுகள் பரவி விட்டன. அவர்கள் (சரியான காரியங்களுக்கு) திரும்பும் பொருட்டு, இவ்விதமாக அவர்களுடைய சில செயல்களின் பின் விளைவுகளை அவர்கள் சுவைக்கும்படி அவர் செய்கின்றார்.