குர்ஆன் 30:39 — ரோமானியர்கள்
சில மனிதர்களின் செல்வத்தைப் பெருக்கு வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெரு வட்டியானது, கடவுள்-இடம் எந்த ஒரு லாபத்தையும் அடைவதில்லை. ஆனால் நீங்கள் கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடியவர்களாக, தர்மம் வழங்கினால், இவர்கள் தான் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காக்கிப் பெற்றுக் கொள்பவர்கள்.
[30:38] ஆகையால், உறவினர்களுக்கும் அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அவர்களுக்கு உரிமையுள்ள (தர்மப்) பங்கை கொடுக்க வேண்டும். மெய்யாகவே கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடுபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும்; அவர்களே வெற்றியாளர்கள்.
[30:40] கடவுள் தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர் தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவைவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். எந்த பங்குதாரர்களையும் கொள்வதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.