குர்ஆன் 30:38 — ரோமானியர்கள்
ஆகையால், உறவினர்களுக்கும் அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அவர்களுக்கு உரிமையுள்ள (தர்மப்) பங்கை கொடுக்க வேண்டும். மெய்யாகவே கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடுபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும்; அவர்களே வெற்றியாளர்கள்.
[30:37] கடவுள், அவர் நாடுகின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிக்கின்றார், அல்லது குறைக்கின்றார் என்பதை அவர்கள் உணர வில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாக இருக்க வேண் டும்.
[30:39] சில மனிதர்களின் செல்வத்தைப் பெருக்கு வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெரு வட்டியானது, கடவுள்-இடம் எந்த ஒரு லாபத்தையும் அடைவதில்லை. ஆனால் நீங்கள் கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடியவர்களாக, தர்மம் வழங்கினால், இவர்கள் தான் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காக்கிப் பெற்றுக் கொள்பவர்கள்.