Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:41 — ரோமானியர்கள்

மனிதர்கள் செய்தவற்றின் காரணத்தால், நிலம் மற்றும் கடல் எங்கிலும் பேரழிவுகள் பரவி விட்டன. அவர்கள் (சரியான காரியங்களுக்கு) திரும்பும் பொருட்டு, இவ்விதமாக அவர்களுடைய சில செயல்களின் பின் விளைவுகளை அவர்கள் சுவைக்கும்படி அவர் செய்கின்றார்.

[30:40] கடவுள் தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர் தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவைவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். எந்த பங்குதாரர்களையும் கொள்வதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.

[30:42] “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு நேர்ந்த பின்விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும்பாலோர் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தனர்.