Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:46 — ரோமானியர்கள்

நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, தன்னுடைய கருணையை உங்கள் மீது பொழிவதற்காகவும், மேலும் அவருடைய சட்டங்களுக்கு இணங்க கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காகவும், மேலும் (வணிகத்தின் மூலமாக) அவருடைய தயாளங்களை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நற்சகுனங்களுடன் காற்றை அவர் அனுப்புவது என்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

[30:45] ஏனெனில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குத் தன்னுடைய தயாளத்திலிருந்து அவர் தாராளமாக பிரதிபலனளிப்பார். நம்ப மறுப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.

[30:47] உமக்கு முன்னரும் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாருக்கு, ஆழ்ந்த அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, வரம்பு மீறியவர்களை நாம் தண்டித்தோம். நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்ப தென்பது நம்முடைய கடமையாகும்.