குர்ஆன் 30:45 — ரோமானியர்கள்
ஏனெனில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குத் தன்னுடைய தயாளத்திலிருந்து அவர் தாராளமாக பிரதிபலனளிப்பார். நம்ப மறுப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.
[30:44] நம்ப மறுக்கின்ற எவரொருவரும், தன் சொந்த ஆன்மாவிற்குக் கேடாகவே நம்பமறுக்கின்றார், அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், தங்களுடைய சொந்த ஆன்மாக்களை பலப்படுத்திக் கொள்ளவும் மேலும் வளர்த்துக் கொள்ளவுமே அவ்வாறு செய்கின்றார்கள்.
[30:46] நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, தன்னுடைய கருணையை உங்கள் மீது பொழிவதற்காகவும், மேலும் அவருடைய சட்டங்களுக்கு இணங்க கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காகவும், மேலும் (வணிகத்தின் மூலமாக) அவருடைய தயாளங்களை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நற்சகுனங்களுடன் காற்றை அவர் அனுப்புவது என்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.