குர்ஆன் 30:44 — ரோமானியர்கள்
நம்ப மறுக்கின்ற எவரொருவரும், தன் சொந்த ஆன்மாவிற்குக் கேடாகவே நம்பமறுக்கின்றார், அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், தங்களுடைய சொந்த ஆன்மாக்களை பலப்படுத்திக் கொள்ளவும் மேலும் வளர்த்துக் கொள்ளவுமே அவ்வாறு செய்கின்றார்கள்.
[30:43] ஆகையால், தவிர்க்கப்பட முடியாததாக கடவுள்-ஆல் ஆக்கப்பட்டிருக்கின்ற அந் நாள் வருவதற்கு முன்னர், பூரணமான இந்த மார்க்கத்திற்கு நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அந்நாளில், அவர்கள் அதிர்ச்சியடை வார்கள்.
[30:45] ஏனெனில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குத் தன்னுடைய தயாளத்திலிருந்து அவர் தாராளமாக பிரதிபலனளிப்பார். நம்ப மறுப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.