Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:47 — ரோமானியர்கள்

உமக்கு முன்னரும் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாருக்கு, ஆழ்ந்த அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, வரம்பு மீறியவர்களை நாம் தண்டித்தோம். நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்ப தென்பது நம்முடைய கடமையாகும்.

[30:46] நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, தன்னுடைய கருணையை உங்கள் மீது பொழிவதற்காகவும், மேலும் அவருடைய சட்டங்களுக்கு இணங்க கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காகவும், மேலும் (வணிகத்தின் மூலமாக) அவருடைய தயாளங்களை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நற்சகுனங்களுடன் காற்றை அவர் அனுப்புவது என்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

[30:48] கடவுள் தான் அவருடைய நாட்டத்திற்கேற்ப, ஆகாயம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்டு, மேகங்களை கலைப்பதற்காக காற்றுகளை அனுப்புகின்றவர். பின்னர் அவர் மேகங்களை அடுக்குகின்றார், பின்னர் அதிலிருந்து மழை இறங்கி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள். அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்த எவர் மீதும் அது விழும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.