குர்ஆன் 30:48 — ரோமானியர்கள்
கடவுள் தான் அவருடைய நாட்டத்திற்கேற்ப, ஆகாயம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்டு, மேகங்களை கலைப்பதற்காக காற்றுகளை அனுப்புகின்றவர். பின்னர் அவர் மேகங்களை அடுக்குகின்றார், பின்னர் அதிலிருந்து மழை இறங்கி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள். அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்த எவர் மீதும் அது விழும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.
[30:47] உமக்கு முன்னரும் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாருக்கு, ஆழ்ந்த அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, வரம்பு மீறியவர்களை நாம் தண்டித்தோம். நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்ப தென்பது நம்முடைய கடமையாகும்.
[30:49] அவர்கள் மீது அது விழுவதற்கு முன்னர், அவர்கள் விரக்தியில் தஞ்சமடைந்து இருந்தனர்.