Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:11 — லுக்மான்

கடவுள்-ன் படைப்புகள் இத்தகையதே; அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருக்கின்றனர்.

[31:10] நீங்கள் காணக்கூடிய வானங்களை அவர் தூண்கள் இன்றி படைத்தார். உங்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு அதன் மீது நிலைப்படுத்துபவைகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார், மேலும் அனைத்து வகை உயிரினங்களையும் அதன் மீது அவர் பரப்பினார். அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் வளர்ப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.

[31:12] லுக்மானிற்கு நாம் ஞானத்தைக் கொடையளித் தோம்: “நீர் கடவுள்-க்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும்”. எவரொருவர் நன்றியுடைய வராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார். நன்றிகெட்டவர்களாக மாறிவிட்டவர் களைப் பொறுத்த வரை, கடவுள் எந்தத் தேவையு மற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.