குர்ஆன் 31:12 — லுக்மான்
லுக்மானிற்கு நாம் ஞானத்தைக் கொடையளித் தோம்: “நீர் கடவுள்-க்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும்”. எவரொருவர் நன்றியுடைய வராக இருக்கின்றாரோ, அவர் தன் சொந்த நலனிற்காகவே நன்றியுடையவராக இருக் கின்றார். நன்றிகெட்டவர்களாக மாறிவிட்டவர் களைப் பொறுத்த வரை, கடவுள் எந்தத் தேவையு மற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[31:11] கடவுள்-ன் படைப்புகள் இத்தகையதே; அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் இணைத் தெய்வங்கள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வழிகேட்டில் வெகு தூரத்தில் இருக்கின்றனர்.
[31:13] லுக்மான் தன்னுடைய மகனிடம், அவருக்கு உபதேசம் செய்தவராக, “என் மகனே, கடவுள்-உடன் இணைத்தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளாதே; இணைத்தெய்வ வழிபாடு மிகப்பெரியதோர் அநீதியாகும்”* என்று கூறியதை நினைவு கூர்வீராக.